இலங்கையின் புகழ்பூத்த எழுத்தாளர் – மட்டக்களப்பின் இலக்கிய கலாநிதி புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவுதினம்!

இலங்கையின் புகழ் பூத்த எழுத்தாளர் மட்டக்களப்பின் இலக்கிய கலாநிதி புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இலக்கிய கலாநிதி புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவு மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு புளியந்தீவு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு அருகாமையில் இடம்பெற்றது.

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவு மன்றத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சி.சந்திரசேகரம்,

உள்ளதும் நல்லதும்’ எனும் இலக்கிய நூல் மூலம் இலக்கியத்துறையில் சஞ்சரித்து பல இலக்கியநூல்களையும்,தமிழ்மொழி சார்ந்த சஞ்சிகைகளையும்,நூல்களையும் உருவாக்கி தமிழ்த்துறைக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளார்.1899.1.8 மண்டூர் மண்ணில் அவதரித்த இவர் 1978.11.2ஆந் திகதி இலக்கியத்துறையில் இருந்து விடைபெற்று இயற்கை எய்தினார்.

இந் நினைவுதினத்தில் அன்னாரின் இலக்கியப்பணி, சமூகசேவை, கல்விப்பணிகள் பற்றி பேசப்பட்டதுடன் அன்னாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி 44ஆவது சிரார்த்ததினம் அனுஸ்டிக்கப்பட்டது.,தன்பின்னர் ஒரு நிமிட மௌன ,றைவணக்கம்,மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அமரர் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் மகன் பெ.சத்தியலிங்கம்,திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மற்றும் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *