மற்றுமொரு வறிய குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு கையளிப்பு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அப்படைத் தலைமையகத்தின் படையினர் யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் வசிக்கும் மற்றுமொரு வறிய குடும்பத்திற்கான வீட்டை நிர்மாணிப்பதற்காக தங்களது தொழில்நுட்ப நிபுணத்துவம், பொறியியல் மற்றும் மனித வள உதவிகளை வழங்கினர்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க குமார் வீரசூரிய என்பவரின் உதவியுடன் ராசதுரை அமுதப்பிரியா என்பவரின் குடும்பத்திற்கு புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது.

11வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் கட்டுமான பணிகளுக்கு அவசியமான மனித வள உதவிகள் வழங்கப்பட்டதுடன் 51 வது படைப்பிரிவின் 513 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் சில வாரங்களில் படையினரால் இந்த பணி நிறைவு செய்யப்பட்டது.

Advertisement

நிர்மாணிக்கப்பட்ட வீட்டை பயனாளிகளுக்கு கையளிப்பதற்காக (13) இடம்பெற்ற நிகழ்வின் போது யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவினால் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

அதே நேரம், பயனாளிகளுக்கு அவசியமான உலர் நிவாரண பொதிகள் மற்றும் குடும்பத்திற்கும் வீட்டிற்கும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் அத்துடன் குடும்பத்தின் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளுக்கு அவசியமான கற்றல் உபகரணங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply