
திருநெல்வேலியில் பயணதடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டோர் கோப்பாய் பொலிசாரால் விரட்டியடிப்பு!
நாடுபூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பயணத்தடையினை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் இன்றையதினம் கோப்பாய் பொலிஸாரினால் விரட்டப்பட்டனர்.
அவ்விடத்தில் மரக்கறி வியாபாரிகள் ஒன்றுகூடி விற்பனையில் ஈடுபடுவதனால் அவ்விடத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நிலைமை காணப்பட்டது பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்தகோப்பாய் பொலீசார் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை அவ்விடத்திலிருந்து விரட்டினர்.




