வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மிகவும் அக்கறைகொண்டு ஐனாதிபதி செயற்படவேண்டும் – புனித பிரகாஷ்

அத்துமீறும் இந்திய மீனவர்களின் செயற்பாடுகளால்  எமது வளங்கள் அழிக்கப்படுகிறது.

இவ்வாறு யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீகந்தவேள் புனித பிரகாஷ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள  அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் வடக்கு கடற்பரப்பில் தற்போது மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதனால் எமது மீனவர்கள் பல்வேறு பிரச்சனைகளை தொடர்ச்சியாக எதிநோக்கி வருகின்றனர்.

குறிப்பாக கடல் வளம் சுரண்டப்படுவதுடன் மீனவர்களின் தொழில் உபகரணங்களும் சேதமாக்கப்படுவதால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இவ்வாறு தொடர்ந்தும் அத்துமீறும் இந்திய மீனவர்களின் செயற்பாடுகளால் எனது வளங்கள் அழிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கே பெரும் சவால் ஏற்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் பல தரப்பினர்களிடமும் நாங்கள் முறையிட்டுள்ள அதேவேளையில் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கிறோம்.

இவ்வாறான நிலைமையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள  தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா மீனவர் விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென கோருகிறோம்.

இதற்கமைய வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மிகவும் அக்கறை கொண்டு ஐனாதிபதி செயற்பட வேண்டும். குறிப்பாக மக்களுக்கு வழங்கி  நம்பிக்கையையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *