அரசாங்க ஊழியர்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக பதவியேற்ற அநுர தனது வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. எனவே, மீண்டும் தேர்தலை கோரும் தார்மீக உரிமை அவருக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் மாத்தறை மாவட்ட பொதுக்கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதற்கு தமது அரசாங்கம் இணங்கிய சம்பள அதிகரிப்பு அல்லது மேலதிக சம்பள அதிகரிப்பை ஜனாதிபதி அநுர குமார உடனடியாக நாட்டுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வழக்குகளை தாக்கல் செய்ய தாம் தயாராக இருந்த போதிலும் அதனை நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நியமனம் மற்றும் தேர்தல் திகதி தொடர்பாக வழக்குத் தொடர இருந்ததாகவும் எனினும் அதனை நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.