வவுனியாவில் இன்றையதினம் இருவர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் சுகவீனம் காரணமாக அவர்களது வீட்டிலேயே மரணமடைந்திருந்தனர்.
மேலும் அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவர்களை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் இச் சம்பவத்தில் கோவில்குளம் மற்றும் தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த இருவரே மரணமடைந்துள்ளனர்.





