தமிழரசுக் கட்சி என்பது ஜனநாயகம் இல்லாத கட்சி- மிதிலைச் செல்வி குற்றச்சாட்டு..!

இலங்கை தமிழரசுக்கட்சி என்பது ஜனநாயகம் இல்லாத கட்சி,  அதற்குள் ஜனநாயகம் இல்லாத செயற்பாடுகளே  இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையின்  செயலாளரும், தற்போது தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும் மிதிலைச் செல்வி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை தமிழரசு கட்சி என்பது  ஜனநாயகம் இல்லாத கட்சி,  அங்கு ஜனநாயகம் இல்லாத செயற்பாடுகளே  இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. 

குறிப்பாக மத்திய குழு எனும் பெயரால் ஒரு சிலரே  தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதாகவும்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய  போராட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது  கூட அப்பகுதியால்  தாண்டி செல்வார்கள். 

அதில் நின்று போராடுவதோ அல்லது ஏனென்று கேட்பதோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்களை வைத்து ஆண்கள் தமக்கான  வாக்கினை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்ததுடன், இவ்வாறான பல்வேறு சம்பவங்களால் தான்  அதிலிருந்து விலகி பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் தமிழ் மக்கள் கூட்டணியில் அதாவது மான் சின்னத்தில் பேட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *