அரசியல் அடிப்படையில் வெளிநாட்டு சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தூதுவர் பதவிக்கு கீழே உள்ள ஏனைய பதவிகளுக்காக முன்னாள் அமைச்சர்களால் நேரடியாக அமைச்சர்களின் பிள்ளைகள் மற்றும் மனைவிகளை நியமித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.