நிலத்தையும் மொழியையும் பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் – சிறிநாத்

நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் போல் நிறைய சுயேட்சைக் குழுக்களும் சிறு, சிறு கட்சிகளும் தென்னிலங்கை தேசிய அரசால் அல்லது மற்றுமொரு சமூகத்தால் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை பிரிப்பதற்காக இங்கு களமிறக்கப்பட்டுள்ளதாக.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அரசு கட்சியில் போட்டியிடும் வேட்ப்பாளர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

இன்று (06) பிரதேச செயலாளர் பிரிவின் கூழாவடி கிராமத்தில இடம்பெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் மக்கள் முன் உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

20 இற்கு மேற்பட்ட சுயேட்சை குழுக்களையும் சிறிய கட்சிகளையும் களமிறக்கியுள்ளது.

இவர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கான அதிகாரம் கேட்டோ, குரல் கொடுத்தோ அல்லது போராட்டங்களை சந்தித்திருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை. ஒவ்வொரு கட்சியும் 500-1000 வாக்குகளைப் பெற்று 25000-300000 வரையான தமிழ் மக்களின் வாக்குகளை இல்லாதொழித்து எங்களுடைய நாடாளுமன்ற ஆசனத்தை இல்லாமல் செய்வதே அவர்களது நோக்கமாகும்.எனவே நாங்கள் அனைவரும் இந்த விடயத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும்.

தென்னிலங்கையில் என்ன அரசுகள் மாறினாலும் அவர்களது அடிப்படைக் கொள்கை மாறுவதில்லை.அவர்களது அடிப்படையான சித்தாந்தம் என்னவென்று தெரியுமா,தமிழ் பேசும் மக்கள் தங்களது உரிமைக்காக போராடாது தமிழ் தேசியத்தின் குரலை நெறித்து சன விகிதாசாரத்தை மாற்றியமைத்து மாவட்டங்களிலே சனத்தொகை பரம்பலை குறைத்து எங்களுடைய நாடாளுமன்றத்தில் தற்போதைய காலச் சூழ் நிலையில் பேரம் பேசும் பலத்தை இல்லாமல் செய்வதாகும்.

அதற்குரிய பல நிகழ்சி திட்டங்கள் அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மிகத் தெளிவாக கட்டமைக்கப்பட்டு இன்று ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்வதற்கு மிகவும் போராட வேண்டிய இக்கட்டான காலச் சூழலில் நாம் இருக்கின்றோம்.

அம்பாறையை எடுத்துக்கொண்டால் பிரதேச செயலகமொன்றில் கணக்காளர் ஒருவரை நியமிப்பதற்கு போராட வேண்டி நிற்கிறது.எதிர்காலத்திலே எங்களுடைய தேசிய இனத்திறகு மிகவும் முக்கியமானது நிலமும் மொழியும் ஆகும்.

இன்று நிலத்தையும் மொழியையும் பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.புதிதாக வந்த ஜனாதிபதி அவர்கள் தமது நிகழ்சி நிரலில் தமிழ் தேசியத்தைப் பற்றியோ கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்தைப் பற்றியோ மனிதாபிமான அடிப்படையில் கூட கருத்து தெரிவிக்க தயாரில்லை. அவர் பெரிதும் நம்பி இருப்பது தென்பகுதி மக்களின் வாக்குகளை என்றபடியால் அவர் கருத்து தெரிவிக்க தயாரில்லாத நிலையில் உள்ளார்.

தென்னிலங்கை மக்களது மனங்களில் மாற்றம் ஏற்பபாடாத போது அவர் தமிழ் மக்களுக்காக எந்த விடயத்திலும் முகம் கொடுக்க தயாரில்லை.கடந்த காலத்தில் கூட ஜே.வி.பியினர் என்ன செய்திருந்தார்கள்.வடகிழக்கு இணைப்பை நீதி மன்றம் நாடி பிரித்தார்கள்.இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார்கள்.சுணாமியால் பாதிக்கப்பட்டபோது எற்படுத்தப்பட்ட பொருளாதார கட்டமைப்பை நீதி மன்றம் நாடி தடை விதித்தார்கள்.

எனவே இந்த அரசாங்கம் எங்களது உரிமைகள் சார்ந்த விடயத்தில் எதையும் தரப்பேவதில்லை என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.ஆகவே எங்களது உரிமை சம்பந்தமாக போராடுவதற்காக எங்களது நிலங்களையும் வளங்களையும் காப்பதற்காக தமிழ் பிரதேசமான மட்டக்களப்பிலே விகிதாசார அடிப்படையிலே நான்கு பாhளுமன்ற உறுப்பினரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது மிக முக்கியமான விடயமாகும்.

இன விகிதாசாரத்தைக் அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் பிரதிநித்துவம் பெறுவதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை.ஆனால் எங்களின் வாக்குகளை கொண்டு எங்களின் இன விகிதாசாரத்தைக் கொண்டு மற்றுமொரு சமூகம் பாராளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் விட்டு விட முடியாது.தென்னிலங்கை தேசிய கட்சி வேட்பாளர் பட்டியலில் 5 பேரை தமிழர்களாகவும் 3 பேரை முஸ்லிம்களாகவும் கொண்டு முஸ்லிம் பிரபல்லியமானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக 5 தமிழர்களின் வாக்கு பலத்தை கடந்த 20 வருட காலமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவான உண்மை.

ஆகவே நாங்கள் தென்னிலங்கை தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என தெளிவான முடிவு எடுக்கவேண்டும்.

திசை காட்டியாக இருக்கலாம் ரெலிபோனாக இருக்கலாம்,எந்த கட்சிகளாக இருந்தாலும் தமிழ் பேசும் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளுக்கே நாங்கள் வாக்களிக்க வேண்டும்.

எனவே நாங்கள் அனைவரும் அந்த விடயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.எனவே வன்முறை இல்லாத ஊழல் லஞ்சம் இல்லாத கட்சியாக தமிழ் தேசியத்துடன் தமிழ் மக்களுக்காக பயணிக்கின்ற ஓரே ஒரு கட்சியாக தமிழ் அரசு கடசி மாத்திரமே உள்ளது, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *