ஜனாதிபதியின் உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவு நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சுனில் வட்டகல செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், கொழும்பு நீதவான் திலின கமகே முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான தகவல்களை முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உடல்நிலை குறித்த பொய்யான தகவல்கள் “சுபாஷ்” என்ற நபரின் கணக்கின் ஊடாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வட்டகல தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில், நீதிமன்றில் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதை உறுதிப்படுத்தினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *