யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் ஹெரோயினுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 வயதுடைய இளைஞன் ஒருவரே 120 மில்லி கிராம் ஹெரோயினுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.