மதுபான அனுமதி பத்திரம் கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து விலகுவேன்- சிறிதரன் உறுதி..!

மதுபானத்திற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்றையதினம்(08)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்கள் தமிழரசுக்கட்சியின் பால் அலையை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது.

தமிழரசுக்கட்சிக்குள் உள்ளவர்களுக்கும் இந்த நிலை ஆதங்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

தமிழரசுக்கட்சி தலைவராக ஜனநாய ரீதியில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தேன்.

தலைவராக தெரிவு செய்த என்னை எமது கட்சிக்குள் வழக்குக் போட்டு செயற்படாது தடுத்தனர்.

மக்கள் இது தொடர்பாக செய்தி சொல்ல முற்படுகின்றனர்.

நாங்கள் போகின்ற இடங்களிலும் சொல்கின்றனர்.எமது கட்சிக்குள் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சேறு பூசும் முயற்சியில் இங்குள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருடன் சேர்ந்து இன்னொருவரும் சேர்ந்து எனக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய நிலையுள்ளது.

மக்களுக்கு சொல்லி வருகின்றேன்  நான் கிளிநொச்சியிலிருந்து யாருக்காவது பார் அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் அதனை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து என்னை விலக்கி விடுங்கள். அதை எல்லாம் செய்ய முடியாதவர்  ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து பார் தொடர்பான விபரங்களை யாரோ ஒருவர் தேடி எடுத்திருக்கிறார்.

அதனை ஒருவர் என்னுடைய கடிதத்தலைப்பை பயன்படுத்தி போலியாக நான் அனுமதி கோரியதாக தெரிவித்து காட்டியிருக்கிறார்.

அதிலே சித்தார்த்தனுடைய பெயரும் குறிப்பிட்டிருக்கிறது. என்னுடைய கடித தலைப்பில் நான் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்து சித்தார்த்தனுடைய பெயர் எப்படி வரும்.

இதன் மூலம் மக்கள் விளங்கிக்கொள்வார்கள் பொலிஸ் நிலையத்தில் உரியவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

மக்களிடம் ஒன்றை சொல்கிறேன் மக்கள் என்னை  நம்புங்கள்  மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *