இரவு நிறுத்தி வைத்த டொல்பின் ரக வேனை காணவில்லை என தெரியவந்துள்ளது.
இவ்வாறு காணாமல் போன டொல்பின் ரக வேனை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீட்டில் நிறுத்தி விட்டு இரவு தூங்கிவிட்டு காலையில் பார்த்த போது வேணில் இருந்த கண்ணாடியை உடைத்து வீசி விட்டு வேனை எடுத்து சென்று உள்ளனர்.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தலைமையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன் லீஸ் செய்த கம்பனி எடுத்து சென்றதா அல்லது வேறு ஏதாவது நடந்ததா என பொலிஸார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.