கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விற்பனை செய்வதற்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு விளக்கமறியலில் சிறைச்சாலை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்படி மேற்கொண்ட விசாரணையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு வருடங்கள் மற்றும் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் பணிக்காக வந்திருந்த 35 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் ஐஸ் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.