மசாஜ் சேவை வழங்குவதாக கூறி கொள்ளையடிக்கும் திட்டத்தில் ஈடுபட்ட 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 6 பேரை பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மசாஜ் சேவை வழங்குவதாக கூறி ஒருவரை ஏமாற்றி கத்திமுனையில் தாக்கி மிரட்டி பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து,
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் மற்றும் 54 வயதுடைய பெண் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இரத்மலானை மற்றும் கல்கிசை பிரதேசங்களைச் சேர்ந்த 19 மற்றும் 23 வயதுடைய மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.