நாளைமறுதினம் (14) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்,
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கும், யாழ். தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (12) நடைபெற்றது.
யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (12) காலை 9:30 மணியளவில்,
யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரச அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.