10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் என ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2024.11.12 ஆம் திகதிய 2410/02 ஆம் இலக்க வர்த்தானி அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.