கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 53வது சேர் ஜோன் ரபட் மெய்வல்லுனர் சம்பியன்சிப்-2024.
கடந்த நவம்பர் 18,19,20 ஆகிய மூன்று நாட்களாக மாத்தறை கொடவில விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற,
தேசிய மட்ட 53வது சேர் ஜோன் றபட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில்,
பாடசாலை சார்பாக 12 வயதுப்பிரிவைச் சேர்ந்த Mohamed Haris Mohamed Hinzan ஓட்டப்பந்தயம் 80M நிகழ்ச்சியில் 11.00 Sec
மற்றும் ஓட்டப்பந்தயம் 100M நிகழ்ச்சியில் 14.00 Sec வினாடியில் ஓடி முடித்து இரு நிகழ்ச்சியிலும் 03ம் இடத்தைப் பெற்று இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
அதேவேளை மற்ற மாணவர் 13 வயதுப்பிரிவைச் சேர்ந்த Nihal Ahamed Sibny Ahamed ஓட்டப்பந்தயம் 100M நிகழ்ச்சியில் 13.30 Sec ஓடி முடித்து திறமைச்சான்றிதழ் வென்றார்.
2002 ஆண்டு பழைய மாணவர் தற்போது விளையாட்டு பயிற்றுவிப்பாளராக பணியாற்றும் N.Mohamed Nifras நீளம் பாய்தலில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதன் பின்னர் சுமார் 22 வருடங்களின் பின் சேர் ஜோன் ரபட் போட்டியில் கிடைத்த தேசியமட்ட பதக்கம் இதுவாகும்.
இவர்களை பயிற்றுவித்த பொறுப்பாசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆகியோர்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்று வழிநடாத்திய உடற்கல்வி ஆசிரியர் ஆ.ஹலீம் அஹ்மத் மற்றும் ,
அனைத்து வழிகளிலும் உதவிபுரிந்து ஒத்துழைப்பு வழங்கும் அன்பு பெற்றோர்களுக்கும்,
இச்சந்தர்ப்பத்தில் அதிபர் அஷ்ரக்கியன் சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
ஊர் திரும்பிய வீரர்களை நேற்று (22) பாடசாலையின் முகாமைத்துவக் குழு, அதிபர் தலைமையில் வீரர்களுக்கு மாலை அணிவித்து பாராட்டி பெற்றோர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.