மாத்தறையில் நடைபெற்ற ‘சிறீ லங்கா ஸ்கூல் அத்லடிக் அசோசியேசன் சேர் ஜோன் டாபட் ஜுனீயர் சம்பியன்ஸிப் ‘-2024 தேசிய மட்டப் போட்டித் தொடரில் ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலையின் மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளனர்.
நீளம் பாய்தல் போட்டியில் யூ.அப்துள்ளா இரண்டாம் இடத்தினையும் நீளம் பாய்தல் ‘மெரிட் ஸ்டேன்டாட்ஸ் மர்றை ஹானும், 200 மீட்டர் ‘மெரிட் ஸ்டேன்டாட்ஸ்’ ஒட்டப் போட்டியில் யூ.அப்துள்ளாவும் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் ‘மெரிட் ஸ்டேன்டாட்ஸ்’யூ.அப்துள்ளா, எம்.ஆர்.ஏ.எச் றைஹான், என்.எம்.நுஸைக், எம்.எப்.அல்ஸாம் மசாரிப் ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியில் வெற்றி பெற நெறிப்படுத்தலை இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஜே.வஹாப்தீன்,அனுமதி ஒத்துழைப்பை வழங்கிய கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம், இம்மாணவர்களை பயிற்றுவித்த பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.அஸ்மத் சஹி, விளையாட்டு ஆசிரியர் ஆர்.நெளஸாத் பாடசாலையின் கெடட் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர் லெப்டினன் ஏ.எம்.எம்.கியாஸ் மற்றும் பாடசாலையின் பிரதி , உதவி அதிபர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.