ஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அனைவரும் செல்லக்கூடிய வகையில் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அதற்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அத்தியாவசியமான மற்றும் அதியாவசியமற்ற பயணிகளும் பயணிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்தார்.

இன்று (சனிக்கிழமை) முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரம் உட்பட பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஓகஸ்ட் 01 முதல் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என டிலும் அமுனுகம குறிப்பிட்டார்.

Leave a Reply