தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தானியங்கி தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டானை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு குறித்த தரவுத்தளம், இணைய ஊடுருவிகளால் அழிக்கப்பட்டிருக்க கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும்.எனவே அது தொடர்பிலான உரிய விசாரணைகளை சுகாதார அமைச்சு தொடர்ந்தும் முன்னெடுக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *