
காரைதீவில் முதல்நாளில் 2090 பேருக்கு தடுப்பூசி!
காரைதீவு சகா
காரைதீசு சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவில் முதல்நாளில் 2090 பேருக்கு தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக காதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தெரிவித்தார்.கல்முனைப்பிராந்தியத்தில் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் இது சாதனையாகக்கருதப்படுகிறது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் வழிகாட்டலில் அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் நடைபெறுகிறது.
மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இதில் நிந்தவூர் பிரதேச இளைஞர் தன்னார்வ அணியினர்,நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள்,பாதுகாப்பு படையினர் இணைந்து கொவிட்-19 தடுப்பூசி இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள்,முன் வரிசை அரசாங்க உத்தியோகத்தர்கள்,கற்பினி தாய்மார்கள்,பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 30,60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி நடவடிக்கைகள் 03 நிலையங்களில் நடைபெற்றது.
அத்துடன் நிந்தவூர் பிரதேச இளைஞர் தன்னார்வ அணியினரால் எமது வைத்திய அதிகாரி பிரிவுகளில் இடம்பெறும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு தொற்று நீக்கி சனிடைசர் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது




