கொரோனாவின் தீவிரத்தை மறந்த யாழ் மக்கள்!

யாழ்நகரில் பயணத் தடையிலும் அதிகளவான மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனையோர் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

எனினும் அவ்வாறான அறிவுறுத்தல்களையும் மீறி பொதுமக்கள் தற்பொழுது வீதிகளில் வழமை போல நடமாடி வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனையோரும் வீதிகளில் தற்பொழுது சுதந்திரமாக நடமாடுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது

யாழில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பயணத்தடை கட்டுப்பாடுகளை பொருட்படுத்தாது பொறுப்பற்ற விதத்தில் வழமைபோன்று வீதிகளில் நடமாடுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *