கொரோனா ஏற்பட்டு குணமடைந்த சிறுவர்களுக்கு மிகவும் ஆபத்தான நோய்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்த சிறுவர்களுக்கு பல உறுப்புக்கள் சார்ந்த  (Multi system inflammatory syndrome) மிகவும் ஆபத்தான நோய் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், சில குழந்தைகள் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாட்டின் பல வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தற்போது 35 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அதற்காக சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் ஏற்படுவதன் மூலம் இந்த நோய் ஏற்படுவதாகவும் கண்கள் சிவத்தல், நாக்கு சிவத்தல் மற்றும் சருமத்தில் சிவப்பு நிற தழும்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் மூளை கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தையும் பாதிக்கலாம் என்றும் இது ஒரு ஆபத்தான சூழ்நிலை என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *