திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடமாடும் சேவை

பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், “ஒரே இடத்தில் தீர்வு” என்ற தொனிப் பொருளின் கீழ், திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இன்று (21) நடமாடும் சேவை  நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவினால் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை ஒரே இடத்தில், பல அதிகாரிகளைச் சந்தித்து, தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் , ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோர், ஒரே இடத்தில் பிரசன்னமாகி இருப்பதனால், மக்கள் தங்கள் பிரச்சனைகளை முழுமையாக தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, திருகோணமலை மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள் மற்றும் பிற பொறுப்பான நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *