பஹந்துடாவா நீர்வீழ்ச்சியில் தவறான காட்சி ஒளிப்பதிவு- தேடுதலில் பொலிஸார்

பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர்.

வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீ​ழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் அதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளமை குறிப்பித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இரத்தினபுரி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்.டீ.டி.வீரசிங்க உறுதிப்படுத்தினார்.

அங்குச் சென்றிருந்த காதல் ஜோடியொன்று நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

இதன்போதே, அக்காட்சிகள் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டுள்ளன என தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *