இறக்குமதியாளர் விபரம் இல்லாத முக பூச்சுக்கள்: யாழ். மக்களே அவதானம்!

யாழ். மாவட்டத்தில் ஒன்லைன் மூலமாக இறக்குமதியாளர் விபரம் குறிப்பிடப்படாத கிறீம் வகைகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்த வியாபார நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வியாபார நிலையங்கள் மீது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ். மாவட்டச் செயலரின் பணிப்பிற்கமைய பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகஸ்த்தர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி யாழ்ப்பாணம், இணுவில், கந்தர்மடம், கோண்டாவில், ஆனைப்பந்தி பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் இவ்வாறு அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

Leave a Reply