
அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நாளை வியாழக்கிழமை (02) முதல் அமுல்படுத்தப்படும் என்று கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன அறிவித்துள்ளார்.




