DeepSeek க்குப் போட்டியாக Qwen2.5 Max ஐ களமிறக்கிய அலிபாபா!

DeepSeek, ChatGPT, Llama ஆகிய மனிதர்களைப் போன்று பதிலளிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்குப் போட்டியாக  சீனாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமான  அலிபாபா  தனது  செயலியான Qwen2.5 Max ஐ அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து அலிபாபா கிளவுட் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “Qwen 2.5-Max செயற்கை நுண்ணறிவு செயலியானது  DeepSeek, ChatGPT, Llama  ஆகியவற்றை விட சிறப்பாக செயற்படுவதாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச AI தளத்தில் டீப்சீக் நிறுவனத்தின் ஏ.ஐ. மொடல்  மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிவேக வளர்ச்சியை பதிவுசெய்து  பிரபலமடைந்து வரும் நிலையில், அதற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் வகையில் அலிபாபாவின் Qwen 2.5-Max  தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *