இலங்கை மற்றும் மாலைதீவிற்கான IOM நிறுவனத்தின் பிரதானி கிறிஸ்ரின் பாகோ, அண்மைய மாதங்களில் புதிதாக பதவியேற்றதனைத் தொடர்ந்து, முதற் தடவையாக யாழ்ப்பாணம் வருகைதந்தார்.
இந்நிலையில் மரியாதை நிமித்தமாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனை நேற்று
அரச அதிபர் அலுவலகத்தில் சந்தித்து, மாவட்டத்தின் தேவைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இச் சந்திப்பில் IOM நிறுவன பிரதிநிதிகள் உடனிருந்தார்கள்.

