சுதந்திர தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவில் குருதிக்கொடை முகாம்

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை இரத்த வங்கியினால் குருதிக்கொடை முகாம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.

அனைத்து மத தலைவர்கள் மத்தியில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய குருதிக்கொடையானது குருதிக்கொடையின் தட்டுப்பாடு தொடர்பிலும் அதன் தேவை தொடர்பிலும் வைத்தியரால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு குருதிக்கொடை ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றிருந்தது. 

இக்குருதிக்கொடை முகாமில் இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் சசினி விஜயரத்ன தலைமையிலான வைத்தியர்களிடம் இரத்தத்தை வழங்கியிருந்தனர்.

பல்வேறுபட்ட தேவைகளிற்காகவும் இரத்த தானம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்ற போதிலும் இரத்ததானம் செய்கின்ற மக்களின் அளவு குறைவாக இருப்பதனால் மதகுருமார்களது உதவியை இனிவரும் காலங்களில் நாடியுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த தட்டுப்பாடு தொடர்ச்சியாக இருப்பதாகவும் இதனை நிவர்த்தி செய்ய அனைவரும் ஆதரவு தருமாறு இரத்த வங்கியின் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *