தேசிய கண் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவலம்!

தேசிய கண் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதுடன், பெரும் சிரமத்துக்கு மத்தியில் சிகிச்சைகளைப் பெறுவதாக நோயாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள ஒரேயொரு தேசிய கண் வைத்தியசாலை கொழும்பு மருதானை டீன்ஸ் வீதியில்  அமைந்துள்ளது. நாளாந்தம் பெருமளவான நோயாளர்கள் வெளியூர்களில் இருந்து கண் நோய்க்கான சிகிச்சை  பெறுவதற்காக வருகின்றனர். 

அவ்வாறு வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிகிச்சைப் பிரிவுக்கு வருகை தரும் ஏராளமான  நோயாளர்களுக்கான இடவசதி போதுமானதாக இல்லை. நோயாளர்கள் இதனால் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

வைத்தியசாலை நிர்வாகத்தினரின் முதற்கொண்டு பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து அதிகாரிகளும் இது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை எனவும்  நாளாந்தம் இவ்வாறானதொரு சிரமான நிலையில் பொதுமக்கள் மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சைகளை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது. 

அவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் வைத்தியசாலையினுள் முறையாக நடத்தப்படுவதில்லை என நோயாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

வைத்தியசாலை நிர்வாகத்தினரின் உட்பட சுகாதார சேவையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து,  நோயாளர்களைக் காப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *