
சுங்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் வெளியில் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எங்களை குற்றம் சாட்டாமல் இதனை வெளிப்படுத்திய சுங்க தொழிற்சங்க தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.