நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் முறையான வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட தயார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதனால் அரசாங்கத்தில் இருந்து ஒரு தரப்பினர் விலகுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வெறும் கனவு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முறையான திட்டம் இருந்தால் யாருடனும் சேர்ந்து பயணிக்க தயார் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அரசாங்கத்திலிருந்து எவரும் பிரிந்து செல்ல முயற்சிக்க வில்லை எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.