வல்லிபுரத்தில் மருத மரம் நாட்டும் நிகழ்வு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஐம்பதாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நீரை பாதுகாப்போம் என்னும் கருப்பொருளில்  வல்லிபுரம் வடமராட்சி அபிவிருத்தி நிறுவனத்தின்  அனுசரணையில் நீர் உள்ளெடுப்பு நிலையத்தில் மருத மரம் நாட்டும் நிகழ்வு  இன்று இடம்பெற்றது.ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி செ.சிறிநிவாசன் தலைமையில் தேவார பாராயணத்துடன் ஆரம்பமான நிகழ்வில் 100 மருத மரங்கள் நாட்டப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் வே.உதயசீலன், யாழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி த.யசோதரன், பருத்தித்துறை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி கு.மணிவண்ணன்,  கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி ஆசிரியர் பாக்கியநாதன்,ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *