சமூக மாற்றத்திற்கான ஊடக மையம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு

சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தினுடைய அலுவலக திறப்பு விழாவானாது இன்று மருதங்கேணி, தாளையடி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது

சிரேஸ்ட ஊடகவியலாளர் சி.த காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசியல் ஆய்வாளர்,சட்டத்தரணி,யாழ் பல்கலைக்கழக வருகை விருவுரையாளர் மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனருமாகிய திரு சி.அ ஜோதிலிங்கம்  கலந்து கொண்டு அலுவலகத்தை நாடாவெட்டி திறந்து வைத்தார் 

சமூக மாற்றத்திற்கான ஊடக அனைத்து ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கி சர்வதேச ரீதியில் செயற்படவுள்ளது.

இந்நிகழ்வில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமரசிங்க, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்கள் சங்கங்களின் சமாச தலைவர், வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர், தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ்குமார், வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் யாழ் மாவட்ட மீனவ ஒத்திழைப்பு இயக்க தலைவருமான முரளிதரன், கவிஞர் யாழ்மருதன், பிரதேச வர்த்தகர்கள், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் போன்றவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *