
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் கொலையா?, குற்றம் ஒன்றின் பிரதிபலனா அல்லது வேறு காரணங்களால் நிகழ்ந்ததா என்பது தொடர்பிலான மரண விசாரணை தீர்ப்பு எதிர்வரும் 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. நேற்று முன் தினம் (11) இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.