
இந்த வாரம் சர்வதேச ஊடகங்களில் இலங்கை இடம்பிடித்தமை பெரும்சாதனை ஒன்றுக்காக அல்ல. மாறாக நாடு முழுவதும் மின் தடை ஏற்படுவதற்கு குரங்கு ஒன்று காரணமாகியது என்பதனாலேயே ஆகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பாணந்துறை உப மின் உற்பத்தி நிலைய கட்டமைப்பில் குரங்கு பாய்ந்ததன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். எனினும் இந்தக் காரணத்தை பலரும் ஏற்க மறுக்கின்றனர்.