வவுனியாவில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் குப்பைகளை அகற்றும் செயல்முறை

வவுனியாவில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் குப்பைகளை அகற்றும் செயன்முறை மாற்று முறையில் பிணக்குத் தீர்த்தல் பொறிமுறைகளை வலுப்படுத்தல் எனும் திட்டத்தினூடாக உருவாக்கப்பட்ட மாற்று முறையில் பிணக்குத் தீர்ப்பதற்கான மன்றத்தினூடாக இன்று (13) முன்னெடுக்கப்பட்டது.

மாற்று முறையில் பிணக்குத் தீர்த்தல் பொறிமுறைகளை வலுப்படுத்தல் எனும் திட்டத்தினூடாக உருவாக்கப்பட்ட மாற்று முறையில் பிணக்குத் தீர்ப்பதற்கான மன்றத்தினூடாக வவுனியா மாவட்டத்தின் சின்னப்புதுக்குளம், பிரதேசத்தில் குப்பைகளை முறையற்ற விதத்தில் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் போடுவதனால் ஏற்படும் முரண்பாடுகளைக் குறைக்கும் வகையில் கடந்த வாரம் ஒரு விழிப்புணர்விற்கான பலகை ஒன்று நிறுவப்பட்டது.

சேர்ச் போ கொமன் கிறவுண்ட் அமைப்பினால் வவுனியாவிலுள்ள பேர்ம் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் சின்னப்புதுக்குளம் பகுதியில் ஏடிஆர் மன்ற உறுப்பினர்கள் சில சமூக மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் அந்த பிரதேசத்தில் சிரமதான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.  

இதன்போது வீதியோரம், வீடுகளை அண்மித்த பகுதிகள் என்பவற்றில் காணப்பட்ட குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டதுடன், அப் பகுதி தூய்மையான பகுதியாக மாற்றியமைக்கப்பட்டது. இதில் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் இணைந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *