'பிடியளவு கமநிலத்துக்கு ஒன்றிணைவோம்'விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு..!

‘பிடியளவு கமநிலத்துக்கு ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் இன்று(15)  முன்னெடுக்கப்பட்டது.

பிடியளவு கமநிலத்துக்கு ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் பயிரிடாது காணப்படும் சகல வயல் மற்றும் மேட்டு நிலங்களை வினைத்திறனாகத் துரிதமாகப் பயிரிடுதல் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. 

கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய விழிப்புணர்வூட்டும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பளை கமநலசேவை நிலையத்திலிருந்து இன்று(15) காலை முன்னெடுக்கப்பட்டது.  

கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தலைமையில் உத்தியோகத்தர்கள் குறித்த விழிப்புணர்வு செயற்றிட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *