மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு கொள்கலன் பாரவூர்தியில் சட்டவிரோதமாக 410 மூடை சிப்பிகள் கடத்தி செல்லப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் வாழைச்சேனை நாவலடி சந்தியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு – திருகோணமலை பிரதான வீதி சந்தியான நாவலடிச் சந்தியில் சம்பவ தினமான இன்று அதிகாலை 3 மணியளவில் வீதிச்சோதனை நடவடிக்கையில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது வாழைச்சேனையில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த கொள்கலன் பாரவூர்தியை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதன்போது சட்டவிரோதமாக தலா 50 கிலோ கொண்ட 410 மூடை சிப்பிகளை குருநாகலுக்கு கடத்திச் செல்வதாக கண்டறியப்பட்டதை அடுத்து அதனை கடத்திச் சென்ற 3 பேரை கைது செய்ததுடன் சிப்பியுடன் கொள்கலன் பாரவூர்தியை மீட்டு வாழைச்சேனை பொலிசாரிடம் ஓப்படைத்துள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
[embedded content]
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில்: