யாழ் மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றதோடு பலரும் இறக்கும் சம்பமும் பதிவாகி வருகின்றது.
யாழ்-மருதனார் மடம் சந்தியில் உள்ள சற்று முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மருதனார் மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு அருகில் உள்ள பழக்கடைக்குள் திடீரென வாள்கள் பொல்லுகளுடன்
நுழைந்த சிறு குழுவினர் அங்கிருந்த வியாபாரி மீது சரமாரியாக வாளினால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு படுகாயமடைந்த வியாபாரியை அங்கிருந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் சில வாரங்களுக்கு முன்னரும் குறித்த நபர் மீது வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





