வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தினை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் குறித்த கிராமத்தினை சேர்ந்த 3 பேர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றனர். அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
ஆயினும் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் தங்காமல் தப்பிச்சென்றிருந்தனர். இது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதார பிரிவினர் குறித்த கிராமத்தில் தேடுதல் நடாத்தி ஏழு நபர்களை தனிமைப்படுத்தியிருந்தனர்.
எனினும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அதனை கடைப்பிடிக்காமல் வெளியில் சுற்றித்திரிந்துள்ளனர்,
எனினும் இது தொடர்பாக சுகாதார பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியை சேர்ந்த 150 பேரிடம் நேற்றையதினம் அன்ரியன் பரிசோதனையினை முன்னெடுத்தனர்.
மேலும் அதில் 32 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் அனேக மக்கள் நாடோடிகள் இனம் என்பது கு





