கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலத்தில் கணவன் – மனைவி மற்றும் குடும்ப சண்டைகள் காரணமாக காயமடைந்த 150 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 21ம் திகதி தொடக்கம் 31ம் திகதி வரையான 10 நாட்களில் இவ்வாறு குடும்ப சண்டைகளில் 150 பேர் காயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் கணவர்களால் தாக்கப்பட்ட 30 மனைவிமார் அடங்குவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் திவயின பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
ஏனையவர்கள் குடிபோதையில் ஏற்பட்ட மோதல்களால் காயமடைந்தவர்கள் என பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்த தரவுகள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து பதிவானவை என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.





