தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!

தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத செல்வாக்குமிக்க தலைவர் வி.தர்மலிங்கத்தின் 36வது நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது .

தாவடியில் உள்ள தர்மலிங்கத்தின் நினைவு சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாட்டில் அமுலிலுள்ள பயணத் தடை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டவர்களின் பங்குபற்றுதலோடு,  சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி, நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *