கொழும்பில் இருந்து நுவரெலியா வரை பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று பாதையை விட்டு விலகி தேயிலைத்தோட்ட பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைத் தரும் முன்னரே அதில் பயணித்த அனைவரும் தப்பிச் சென்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (17) அதிகாலை ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை சென்க்ளேயார் தோட்ட பகுதியிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டி கடும் சேதமடைந்துள்ளதாகவும், முச்சக்கரவண்டியின் சாரதி மதுபோதையில் பயணித்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.