இராணுவத்தின் 1500 அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசிகள் கல்முனைக்கு! – பிராந்திய சுகாதாரசேவைபணிப்பாளர் சுகுணன்

இராணுவத்தின் 1500 அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசிகள் கல்முனைக்கு..!கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைபணிப்பாளர் சுகுணன்

( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 1500 
அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசிகள் எமது கல்முனைப்பிராந்தியத்திற்கு கிடைத்துள்ளன. அவற்றை இன்னும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க உத்தேசித்துள்ளோம்.

என்று  கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைபணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
கல்முனைப்பிராந்தியத்தில் சமகால கொவிட் நிலைமை பற்றிமேலும் கூறுகையில்:

எமது கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை 5000பேரளவில் இன்னும் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் 60வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.
அப்படிப்பட்டவர்கள் தத்தமது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமது பெயர்களை பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஜரோப்பிய நாட்டு கம்பனிகளால் தயாரிக்கப்பட்டு ஜப்பான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசி இரண்டு தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதால அச்சமின்றி இதனைப்பெறலாம்.
எமக்கு முதலில் கிடைத்த தடுப்பூசிகளைக்கொண்டு  முதலாவது டோஸ் இதுவரை 96.33வீதமானோர்களுக்கு ஏற்றியுள்ளோம்.இரண்டாவது டோஸ் கடந்த 3நாட்களில் 47.42வீதமானோருக்கு ஏற்றப்பட்டன.

மீதி 50வீதமானோருக்கான இரண்டாவது தடுப்பூசி அடுத்தவாரமளவில் வழங்கமுடியும். எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டுக்கு ஒருதொகுதி சினோபாம் ஊசிகள் வருகின்றன.

இதேவேளை கல்முனை பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்  இரண்டு மரணங்கள்   பதிவாகியுள்ளது. இறுதியாக பொத்துவில் கல்முனை ஆகிய பிரதேசங்களில் 70வயது ஆணொருவரும் , 59வயது பெண்ணொருவரும் மரணித்துள்ளனர். இதுவரை மொத்தமாக 147 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
எதுஎப்படியிருப்பினும் இம்மாதம் நிறைவுறும் நேரம் எமது பிராந்தியத்தில் கொவிட் மரணத்தை பூச்சியமாக்கவுள்ளோம்.

எனவேபொதுமக்கள் நிலைமையினை புரிந்துகொண்டு மிகவும் கவனமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் . அமுல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தின் அவசியத்தை உணர்ந்து நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *