காயங்களுடன் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள ஜெயந்திபுர வீதியில் இருந்து சடலமொன்று நேற்று சனிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர். 

இறந்தவர் சுமார் 55 வயதுடையவர் எனவும் 5 அடி 6 அங்குல உயரமுடையவரும், நீல நிற முழுக்கை சேட் மற்றும்  காற்சட்டை அணிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *