அச்சுவேலி பகுதியில் மின்னல் தாக்கி, பேருந்து சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்கு 43 வயதென எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த நபரின் சடலம் மேலதிக பரிசோதனைக்காக அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





