மொடர்னா தடுப்பூசியை செலுத்தும் மாவட்டம் தொடர்பான தகவல் வெளியானது

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள மொடர்னா கொவிட் தடுப்பூசியை, கண்டி மாவட்டத்துக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.

கண்டி மாவட்டத்தின் கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்தவுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இலங்கையில் கொவிட் தடுப்பு திட்டத்துக்காக பயன்படுத்தப்படும் 5 ஆவது தடுப்பூசி மொடர்னா என அவர் குறிப்பிட்டார்.

மொடர்னா தடுப்பூசியானது 93 வீதம் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

Leave a Reply